டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை குவித்து முதலிடத்தில் இடம்பிடித்திருந்த ரோகித் சர்மாவை நேற்றைய ஆட்டத்தில் எடுத்த ரன்களின் மூலம் கோலி பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியதற்கு பின்னர், கோலி கிரிக்கெட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், ரோகித் சர்மாவும் அந்த பதவிக்கு தகுதியானவர் என அவருக்கும் பிசிசிஐயில் இருந்தே ஆதரவு பெருகி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சில போட்டிகளில் கோலிக்கு ஓய்வு கொடுத்து ரோகித் சர்மாவை கேப்டனாகவும் நியமித்து வருகின்றனர்.
கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு இடையே ஒரு மிகப்பெரிய எதிரி மனப்பான்மையை வேண்டுமென்றே வளர்த்து வருவது கிரிக்கெட் ரசிகர்களால் கிடைக்கும் லாபத்திற்கானது.
இந்த போட்டி இப்படி இருக்க, நேற்றைய டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வெற்றி பெற்ற நிலையில், டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் அடித்து முதல் வீரராக இருந்த ரோகித் சர்மாவின் சாதனையை விராத் கோலி குறுகிய போட்டிகளில் வீழ்த்தி பின்னுக்குத் தள்ளி புதிய சாதனையையும் புதிய போட்டியையும் உருவாக்கியுள்ளார்.
ரோகித் சர்மா 97 டி20 போட்டிகளில் விளையாடி 89 இன்னிங்சில் 2434 ரன்கள் எடுத்து முன்னிலை வகித்து வந்த நிலையில், விராத் கோலி நேற்றைய ஆட்டத்தையும் சேர்த்து 71 ஆட்டத்தில் 66 இன்னிங்சில் விளையாடி 2441 ரன்கள் எடுத்து முதலிடத்தை பிடித்துள்ளார்.
டி-20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற அந்தஸ்த்தை பிடித்துள்ள விராத் கோலிக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.