ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 வில் கமலுடன் இணையும் அனில்கபூர் 3 கதாநாயகிகளுடன் குவியும் நட்சத்திர பட்டாளம்

Anilkaporr joined in indian 2 with kamalhaasan

by Chandru, Oct 2, 2019, 15:00 PM IST

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி கடந்த 1996ம் ஆண்டு திரைக்கு வந்தது இந்தியன். இதில் இரட்டை வேடம் ஏற்றிருந்தார் கமல்ஹாசன். 23 ஆண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது 'இந்தியன் 2பாகம் உருவாகிறது.

இதன் படப் பிடிப்பு சென்னை, ராஜமுந்திரி பகுதிகளில் நடக்கிறது. இதற்காக இந்தியன் தாத்தாவாக கமல் நடித்த முக்கிய காட்சிகள் படமாகி வருகின்றன. இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் இந்தி நடிகர் அனில்கபூர்.

ஏற்கனவே இவர் தமிழில் வெளியான முதல்வன் படத்தின் இந்தி ரீமேக்கான நாயக் படத்தில் ஷங்கர் இயக்கத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன்ன 2வில் அனில்கபூர் எந்த கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார் என்பதுபற்றி விரைவில் தெரியவரும்.


இதில் காஜல்அகர்வால், ரகுல் பிரீத்திசிங், பிரியா பவானிசங்கர் 3 கதாநாயகிகள் நடிக்கின்றனர். இவர்களுடன் சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், வித்யூத் ஜம்வால், சமுத்திரகனி, டெல்லி கணேஷ் என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடிக்கிறது.

இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதிக பொருட் செலவில் தயாராகி வரும் இப்படம் வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

You'r reading ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 வில் கமலுடன் இணையும் அனில்கபூர் 3 கதாநாயகிகளுடன் குவியும் நட்சத்திர பட்டாளம் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அதிகம் படித்தவை