பள்ளிக்கூடம் உள்ளிட்ட கிராமத்து, நகரத்து பிண்ணியிலான படங்களை இயக்கி. நடித்தவர் தங்கர்பச்சான். அடுத்து சென்னையை பிண்ணனியாக கொண்ட நகைச்சுவைப் படம் இயக்குகிறார். இப்படத்திற்கு 'டக்கு முக்கு டிக்கு தாளம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதில் தங்கர்பச்சான் மகன் விஜித் பச்சானை கதாநாயகனாக அறிமுகமாக்குகிறார். முனீஸ்காந்த் நாயகனுக்கு இணையான முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மிலனா நாகராஜ், அஸ்வினி இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகிராம் மூவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.