சர்வதேச திரைப்பட விழாவுக்கு, ஹவுஸ் ஓனர் தேர்வு.. இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் மகிழ்ச்சி..

House Owner gets selected at International Film Festival of India 2019

by Chandru, Oct 10, 2019, 13:35 PM IST

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான படம் ஹவுஸ் ஓனர். இந்த படம் வெளியீட்டின்போதே ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றது.

சென்னையில் நடந்த மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட முதிய தம்பதியரின் காதலை, அழகோடும் அன்பாகவும் சொன்ன படம். இப்படம் சர்வதேச இந்திய திரைப்பட விழா 2019ல் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 26 திரைப்படங்களில் “ஹவுஸ் ஓனர்” படம் இடம்பிடித்துள்ளது.

இதனால் மொத்தப் படக்குழுவும் மிகப்பெரும் உற்சாகத்தில் உள்ளது. இப்படத்தை லட்சுமியின் கணவர் ராமகிருஷ்ணன் தயாரித்திருந்தார். கிஷோர், ஶ்ரீரஞ்சனி, 'பசங்க' புகழ் கிஷோர், மற்றும் லவ்லின் சந்திரசேகர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
உலக திரைப்பட விழாவிற்கு ஹவுஸ் ஓனர் படம் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது:

இது முற்றிலும் நான் எதிர்பாராத ஒன்று. மிகுந்த ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் ஒருங்கே அளித்திருக்கிறது. பட வெளியீட்டின் போதே படத்தை வெகுவாக பாராட்டிய பத்திரிகை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன்.

எனது திரைப்படத்தின் மீதான காதலையும் அதன் மீதான என் ஆர்வத்தையும் இந்த அங்கீகாரம் பெரும் ஊக்கத்தை தந்து மேலும் மேலும் பயணிக்கும் தெம்பை தந்துள்ளது. இந்நேரத்தில் இந்திய சர்வதேச திரைப்பட அமைப்பினருக்கு எனது மிகப்பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

You'r reading சர்வதேச திரைப்பட விழாவுக்கு, ஹவுஸ் ஓனர் தேர்வு.. இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் மகிழ்ச்சி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை