ஹீரோயிசம் கேரக்டரில் ஹன்சிகா... வில்லனாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அறிமுகம்..

cricketer Sreesanth and Hansika Motwani to star in a horror comedy?

by Chandru, Oct 11, 2019, 17:38 PM IST

விஜயசாந்தி , நயன்தாரா , டாப்சி ஹீரோக்களை தனித்தன்மையுள்ள ஹீரோயிசம் கதையில் நடித்து பிரபலமானர்கள். தற்போது ஹன்சிகாவும் அதேபோன்றதொரு புதிய கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் இது.

இப்படத்தை , யோகிபாபு நடித்து சமீபத்தில் வெற்றி பெற்ற 'தர்மபிரபு' படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் பி.ரங்கநாதன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். ஹாரர் , காமெடி , பேய்ப்படமாக அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இக்கதையை அமைத்துள்ளார்கள்.

இதில் சிறப்பம்சமாக முக்கிய வேடத்தில் -நெகடிவ் கேரக்டரில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடிக்கிறார். இப்படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமாகி றார். இரட்டை இயக்குனர்கள் ஹரி -ஹரிஷ் இயக்குகிறார்கள். ஏற்கனவே 'அம்புலி' , ' ' 'அ ' (AAAH ), 'ஜம்புலிங்கம்' போன்ற படங்களை இவர்கள் இயக்கியுள்ளனர்.

வரும் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்கும் இப்படத்தை 2020 கோடை விடுமுறை நாட்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

You'r reading ஹீரோயிசம் கேரக்டரில் ஹன்சிகா... வில்லனாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அறிமுகம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை