வா மச்சான் வா வண்ணரப்பேட்டை.. பாடல் மூலம் வண்டி சக்கரம் படத்தில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானவர் சிலுக்கு ஸ்மிதா.
முதல்படத்திலேயே ஹிட்டானதால் அடுத்தடுத்து வெளியான அத்தனை படங்களிலும் சிலுக்குவை ஒப்பந்தம் செய்யபோட்டி போட்டினர். 80களில் சில்க் ஸ்மிதா இல்லாத படங்களே இல்லை என்றளவுக்கு பிஸியாக நடித்தார். முன்னணி நடிகர்கள் அத்தனை பேருடனும் நடனம் ஆடி நடித்தவர் திடீரென்று ஒரு நாள் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். அத்துடன் அவரது அலை ஓய்ந்தது. ஆனாலும் அவரது நினைவு ரசிகர்கள் மனதிலிருந்து ஓயவில்லை.
கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ வைரலாகிக்கொண்டிருக்கிறது. தாடையின் வலது புறத்தில் கருத்த மச்சத்துடன் சில்க் ஸ்மிதாபோன்ற முகச்சாயல் கொண்ட ஒரு பெண், 'அடுத்த வாரிசு' படத்தில் ரஜினியுடன் சில்க் ஸ்மிதா பாடி ஆடும், 'பேசக்கூடாது..' பாடல் பின்னணியில் கிக்கான பார்வை பார்க்கிறார். அதேபோல் நீங்கள கேட்டவை படத்தில் இடப்பெற்ற மனம் நில்லுனா நிக்காதடி பாடலுக்கு கண் சிமிட்டிபோதை ஏற்றியிருக்கிறார்.
நெட்டில் வைரலாகியிருக்கும் அந்த பெண்ணுக்கு பட வாய்ப்புகள் வரவும் வாய்ப்பிருக்கிறது என்று முணுமுணுக்கப்படுகிறது.