சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படம் சில தினங்களுக்கு முன் வெளியானது.
முன்னதாக இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க நயன்தாராவை அழைத்தபோது வரமறுத்துவிட்டார். இது சிரஞ்சீவிக்கும், தயாரிப்பாளர் ராம் சரணுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. தங்களது பிடியை விட்டுக் கொடுக்காமல் நயன்தாராபற்றி கவலைப்படாமல் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்தனர். அப்படத்தில் நடித்த தமன்னா மட்டும் எல்லா புரமோஷன் நிகழ்ச்சியிலும் சிரஞ்சீவியுடன் பங்கேற்றார்.
நயன்தாரா பட புரமோஷனில் பங்கேற்காததை மனதில் வைத்து அவருக்கு மறைமுகமாக டோஸ்விட்டார். இதுபற்றி சிரஞ்சீவி கூறும்போது,'படத்தில் நடித்த மற்றொரு ஹீரோயின் (நயன்தாரா) புரமோஷன்களுக்கு வரமுடியாது என்று கூறிவிட்டார். அதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் இப்படத்தின் எல்லா புரமோஷனிலும் தமன்னா கலந்துகொண்டார்.
தமன்னா வெறும் கமர்ஷியில் நடிகை மட்டுமல்ல அதையும் தாண்டி நடிப்பு திறமை மிகுந்தவர் என்பதை சைரா படத்தில் நிரூபித்திருந்தார். இளம் தலைமுறை நடிகைகளுக்கு தமன்னாதான் உதாரணமாக இருக்கிறார்' என்று தமன்னாவை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளிவிட்டார். அதைக்கேட்டு அருகில் இருந்த தமன்னா மகிழ்ச்சியில் திளைத்துப்போனார்.