விஜய் டிரெய்லர் வெறித்தனமானது.. ஒன்றரை கோடி பேர் பார்த்தனர்..

Advertisement

அட்லி இயக்கத்தில் விஜய்யின் பிகில் பட டிரெய்லர் நேற்று மாலை வெளியானது. அட்லி இயக்கியிருக்கும் அதிரடியான கால்பந்தாட்ட காட்சிகள் ஆக்மிரமித்திருக்கும் டிரெய்லரில் ஒரு காட்சியில் செஞ்சரலாமா என வில்லன் கூட்டம் கேட்கும்போது செஞ்சிட்டா போச்சு என வெறித்தனமாக கூறியவுடன் வரும் சண்டை காட்சிகள், கறுப்பு சட்டை அணிந்து காவி வேட்டியை மடக்கிகட்டிக்கொண்டு தந்தை விஜய் ஆக்ரோஷமாக நடந்து வரும் காட்சி மற்றும் நயன்தாராவுடன் ரொமான்ஸ் என டிரைலர் முழுவதும் விஜய்க்கான மாஸ் மற்றும் கமர்ஷியல் காட்சிகள் நிறைந்துள்ளன.

'புள்ளிங்கோ கிரவுண்ட்ல விளையாடட்டும் நம்ம வெளியில விளையாடலாமா?' என வில்லன்களிடம் நக்கலுடன் கேட்கும் விஜய், 'புட்பால் எல்லாம் தெரியாது ஆனா எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் என அப்பா விஜய் பேசும் காட்சி என விஜய் ரசிகர்களுக்கான மாஸ் காட்சிகள் டிரைலர் முழுவதும் தெரிகிறது ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். பிகில் டிரெய்லர் வெளியாகி 1 மணி நேரத்தில் 10 லட்சம் பேர் பார்த்து சாதனை ஏற்படுத்தி உள்ளனர். தற்போதுவரை 1 கோடியே 49 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டிரெய்லரை பார்த்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷேவின் மகன் நாமல் பக்‌ஷே டிவிட்டர் பக்கத்தில் 'தேர்தலுக்கு பின் முடிவிற்காக காத்திருக்கலாம். ஆனால், எனக்கு பிடித்த நடிகர் விஜயின் பிகில் படத்தை பார்க்க பொறுக்க முடியாது. இப்படம் விஜய் ரசிகளுக்கு மாபெரும் விருந்தாக அமையும்' என பதிவிட்டிருந்தார். ஆனால் விஜய் ரசிகர்கள் இதை ரசிக்கவில்லை. அவர்கள் நாமல் பக்‌ஷேவை கண்டித்து மெசேஜ் பகிர்கின்றனர்.

பிகில் டிரெய்லர் வெளியான மகிழ்ச்சி ஒரு பக்கம், ராஜபக்சேவின் மகனின் டிவிட்டரை கண்டு கோபம் ஒருபக்கமுமாக இருக்கின்றனர் ரசிகர்கள்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>