ரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா

by Chandru, Oct 13, 2019, 22:44 PM IST
Share Tweet Whatsapp

விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அக்னி சிறகுகள்.

ஆக்‌ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். டி.சிவா அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார். 

கே.எஸ்.பாச்சா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன் இப்படத்தை இயக்குகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் முடிந்தது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ரஷ்யா சென்றுள்ளார்கள்.

இந்நிலையில் நடிகை அக்‌ஷரா ஹாசனின் பிறந்தநாளை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Leave a reply