தனுஷுக்கு ஜோடியாக அசுரன் படத்தில் நடித்துள்ளார் மஞ்சுவாரியர். தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி 4வது முறையாக இணைந்திருக்கும் அசுரன் படம் அக்டோபர் 4ம் தேதி வெளியானது.
முதன்முறையாக தமிழில் நடித்திருக்கும் மஞ்சுவாரியர் ரசிகர்களின் பாராட்டை பெற்றார். அவரது நடிப்பை நடிகர் கமல்ஹாசனும் பாராட்டியிருக்கிறார் . கமலுடன் மஞ்சுவாரியர் எடுத்துக் கொண்ட புகைப்படம் நெட்டில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்று மஞ்சுவிடம் கேட்டுக்கொண்டார் கமல். முன்னதாக கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன் இருவரும் அசுரன் படத்தை ரசித்துப்பார்த்தனர்.