இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது ஏன்?.. சிருஷ்டி டாங்கே பதில்..

by Chandru, Oct 15, 2019, 18:53 PM IST
Share Tweet Whatsapp

திரிஷா, நயன்தாரா, சமந்தா முன்னணி நடிகர் களுக்கு ஜோடியாக நடித்தாலும் 5 முதல் 8 வயதுள்ள குழந்தைகளுக்கு தாய் ஆகவும் நடிக்கிறார்கள். இது அவரவர்களின் வயதுக்கேற்ற கதா பாத்திரமாகவும் பார்க்கப்படுகிறது.

மேகா, கத்துக் குட்டி, தர்மதுரை போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள சிருஷ்டி டாங்கேவும் கட்டில் என்ற புதிய படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆக நடிக்கிறார். கணேஷ் பாபு படத்தை இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார்.

அம்மா வேடம் ஏற்று நடிப்பதுபற்றி சிருஷ்டி டாங்கே கூறும்போது,'கட்டில் படம் என்றதும் அந்தமாதிரியான படம் என்று எண்ண வேண்டாம். இது நடுத்தர குடும்பத்தின் பின்னணியில் காரைக் குடியை பின்னணியாக கொண்டு நடக்கும் ஒரு சுவாரஸ்யமான கதை.

இதில் இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆக நடிப்பதுபற்றி கேட்கிறார்கள். இந்த பாத்திரததை இயக்குனர் என்னிடம் சொன்ன வுடன் விரும்பி ஏற்றுக்கொண்டேன். நடிப்பை வெளிப்படுத்த அதிக வாய்ப்புள்ள கதாபாத்திரம். இந்த பாத்திரத்தை நான் ஏற்றுக்கொண்டது சரிதான் என்பதை படம் வெளிவரும்போது அனைவரும் உணர்வார்கள்.

இவ்வாறு சிருஷ்டி டாங்கே கூறினார்.


Leave a reply