ரசிகர்களால் தல என்றழைக்கப்படும் அஜீத் நடிப்பில் மட்டுமல்லாமல் கார், பைக் பந்தயங்கள், புகைப்படங் கள் எடுப்பதிலும் ஆர்வமும், திறமையும் உள்ளவர். சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் பங்கேற்றிருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்தான் அவர் துப்பாக்கியால் குறிபார்த்து சுடுவதிலும் கில்லாடி என்ற தகவல் தெரியவந்தது.
இதற்கிடையில் சென்னை தொழில்நுட்ப கல்லூரியில் வான்வெளி ஆராய்ச்சி குழு ஆலோசகராக பணியாற்றி ஆளில்லா விமானங்களை உருவாக்கும் மாணவர்களுக்கு உதவி செய்தார்.
கோவையில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட அஜீத், சமீபத்தில் டெல்லி சென்று அங்குள்ள டாக்டர் கர்னிசிங் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். பினனர் அங்கு நடந்த போட்டியில் 3 பிரிவுகளின் கீழ் அவர் கலந்து கொண்டு இரண்டு பிரிவுகளில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பான பட்டியலும் சமூக வலைத்தளத்தில் வலம் வருகிறது. ஸ்டேண்டர் பிஸ்டல் பிரிவில் 12-ம் இடத்தையும், ஸ்போர்ட்ஸ் பிரிவில் 9-வது இடத்தை யும், பிரி பிஸ்டல் பிரிவில் 8-வது இடத்தையும் அஜீத் பிடித்திருப்பதாக இதுகுறித்த பட்டியலில் குறிப்பிடப் பட்டு உள்ளது. இரண்டு பிரிவுகளில் முதல் 10 இடங்களுக்குள் வந்து இருப்பதை அஜித் ரசிகர்கள் வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.
விளையாட்டு போட்டி, குடும்பம் என பொழுதுபோக்கு என நேரத்தை செலவிட்டு வரும் அஜீத் விரைவில் வினோத் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.