வடிவேலு படத்தை கைப்பற்றிய யோகிபாபு.. பேய் மாமாவாகிறார்...

Yogi Babu replaced Vadivelu in `Pei Mama`

by Chandru, Oct 18, 2019, 17:39 PM IST

ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன்-2ம் படத்தில் நடிக்க விருந்தார் வடிவேலு.

பட தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையையடுத்து அப்படத்திலில் நடிக்காமல் ஒதுங்கினார். இதையடுத் வடிவேலு கடந்த 2 வருடங்களாக புதிய படங்களில் நடிக்கவில்லை.

இதனால் நிறைய பட வாய்ப்புகளை இழந்தார். இது காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு சாதகமாக அமைந்தது அவருக்கு கைநியை படங்கள் குவிந்தது. கடந்த வருடம் யோகிபாபு நடித்து 19 படங்கள் திரைக்கு வந்தன. தற்போது 20-க்கும் மேற்பட்ட படங்கள் கைவசம் வைத்துள்ளார். காமெடி நடிகராக மட்டுமல்லாமல் கூர்கா, ஜாம்பி படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார்.

ஷக்தி சிதம்பரம் இயக்கும் பேய் மாமா படத்தில் வடிவேலு நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். தற்போது இம்சை அரசன்-2 பிரச்சினை காரணமாக அவரை நீக்கி விட்டு யோகிபாபுவை ஒப்பந்தம் செய்து படவேலைகளை தொடங்கி உள்ளார்.

இதன் படப்பிடிப்பு குமுளி பகுதியில் நடந்து வருகிறது. யோகிபாபு படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். இம்சை அரசன் 2-ம் பாகம் படத்திலும் வடிவேலுக்கு பதில் யோகிபாபுவை நடிக்க வைக்க ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை