சிவகார்த்தியின் மோதலும்... வேகமும்.. என்னவாகும் ஹீரோ டைட்டில் சர்ச்சை..

Sivakarthikeyan hero second look on Twitter

by Chandru, Oct 18, 2019, 17:33 PM IST

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'நம்ம வீட்டு பிள்ளை' சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அடுத்து 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கி வரும் ஹீரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஹீரோ என்ற பெயரில் தனது படத்துக்கு ஏற்கனவே பெயரிடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் எனவே சிவகார்த்திகேயன் பட டைட்டிலை மாற்ற வேண்டும் என்று விஜய்தேவரகொண்டா நடிக்கும் பட தரப்பிலிருந்து புகார் எழுந்தது.

புகார் ஒரு பக்கம இருந்தாலும் சிவகார்த்திகேயனின் படப்பணிகள் ஜரூராக நடந்துக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் அடுத்த அப்டேட் எப்போது? என சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று படத்தின் செகண்ட்லுக் வெளியிடப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஹீரோ டைட்டில் ச்ர்ச்சை பற்றிய முடிவு எதுசும் வராத நிலையில் சிவகார்த்தியும். விஜய்தேவரகொண்டாவும் தங்களது படப்பிடிப்பில் கவனமாக இருக்கின்றனர்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை