வெளிநாட்டில் சுற்றித் திரிந்த லவ் பேர்ட்ஸ் பிரபாஸ், அனுஷ்கா ஜோடி.. லண்டன் வீதியில் நகர் வலம்...

by Chandru, Oct 19, 2019, 19:30 PM IST
Share Tweet Whatsapp

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா நடித்த பாகுபலி ஆகியோர் லண்டனில் நடந்த பட விழாவில் பங்கேற்றனர்.

இதற்காக குழுவாக அவர்கள் அனைவருமே லண்டன் சென்றனர். ஏற்கனவே பிரபாஸ், அனுஷ்கா இருவரும் காதலிப்பதாக பேசப்பட்டு வருகிறது. ஆனாலும் அவர்கள் இருவரும் அதை ஒப்புக்கொள்ளவில்லை, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்' என்று சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபாஸ், அனுஷ்கா லண்டன் வீதிகளில் ஜோடியாக சுற்றித்திரிந்தனர். அவர்களுடன் ராஜமவுலி, ராணா ஆகியோரும் உடன் சென்றனர். ஆங்காங்கே முக்கிய இடங்களில் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண் டனர். இந்த புகைப்படத்தை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபாஸ், ராணா இருவருமே பதிவிட்டுள்ளனர். இந்த படம் நெட்டில் வைரலாகி வருகிறது.

நாங்கள் காதலிக்க வில்லை என்று பிரபாஸ், அனுஷ்கா மறுத்தாலும் அவர்கள் அவ்வப்போது ஜோடிபோட்டு சுற்றுவது காதல் கிசுகிசுவுக்கு பலம் சேர்ப்பதுபோல் உள்ளது.


Leave a reply