வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதில் சிம்பு ஹீரோவாக நடிக்கி ஒப்புக்கொண்டிருந்தார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கவிருந்தார். தாய்லாந்தில் படபிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் படத்திற்கு சிம்பு ஒத்துழைக்க வில்லை அவரை படத்திலிருந்து நீக்குவதாக தயாரிப்பாளர் தெரிவித்து இருந்தார். படம் டிராப் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து சிம்புவின் தரப்பிலிருந்து மகா மாநாடு என்ற படம் தயாரிக்க இருப்பதாக பதிலடி தந்தனர்.
இதுபற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தை யில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் கலந்துகொண்டு மாநாடு படத்தின் படப்பிடிப்பில் சிம்பு வருவதற்குத்தான் தான் உத்தரவாதம், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை படப்பிடிப்புக்கு வருவார் என்றும் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விரைவில் மாநாடு தொடங்கப்படும் என தெரிகிறது.