உயிருக்கு ஆபத்து, அசுரன் பட நடிகை அலறல் இயக்குனர் மீது போலீசில் புகார் அளித்ததால் பரபரப்பு..

மலையாள படங்களில் நடித்து வந்தவர் நடிகை மஞ்சு வாரியர். இவர் நடிகர் திலீப்பை காதலித்து மணந்து பின்னர் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். தமிழ் படங்களில் தலைகாட்டாமல் ஒதுங்கியிருந்த மஞ்சுவாரியர் தனுஷின் அசுரன் படம் மூலம் அறிமுகமானார். அப்படம் வரவேற்பை பெற்றது. இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தனுஷைபோலவே மஞ்சுவாரியருக்கும் பாராட்டு கிடைத்தது.

முன்னதாக மலையாள பட இயக்குனர் ஸ்ரீகுமார், ஓடியன் என்ற படத்தை இயக்கினார். மோகன்லால் ஹீரோவாக நடித்தார். மஞ்சு வாரியரும் நடித்திருந்தார். இப்படத்தின் புரமோஷனுக்கு மஞ்சு வாரியர் என்று வரவில்லை என்று தெரிகிறது. இந்த கோபத்தில் மஞ்சுயை பற்றி ஸ்ரீகுமார் பல்வேறு முறை திட்டினார். இந்நிலையில் கேரள டிஜிபியிடம் மஞ்சுவாரியர் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் ஸ்ரீகுமார் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் .

எனது என் உயிருக்கு இயக்குனர் ஸ்ரீகுமாரால் ஆபத்துஏற்படுள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. நான் கையெழுத்துபோட்டுக்கொடுத்த லெட்டர் , மற்றும் சில ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி வருகிறார். இந்த மனு மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.

மஞ்சு வாரியரின் புகாருக்கு பதில் அளித்திருக்கும் இயக்குநர் ஸ்ரீகுமார். சமூக வலைத்தளத்தில் அவர் கூறியுள்ள பதிலில், 'பத்திரிகைகளில் பார்த்தே உங்கள் (மஞ்சு வாரியர்) புகாரைத் தெரிந்துகொண்டேன். 'காரியம் முடிந்ததும் கைவிட்டுவிட்டு செல்பவர்தான் மஞ்சுவாரியர், அவரை நம்ப வேண்டாம்' என்று என்னிடம் பலர் கூறியிருக்கிறார்கள்.

திலீப்பை பிரிந்து வீட்டை விட்டு வெளியே வரும் போது, வெறும் ஆயிரத்து ஐநூறு ரூபாய் மட்டுமே இருக்கிறது என்று சொன்னதை நான் மறக்கவில்லை. அப்போது ரூ.25 லட்சம் கொடுத்து விளம்பர படத்துக்கும் சினிமாவுக்கு ஒப்பந்தம் செய்தேன்.

அப்போது, அந்த குருவாயூரப்பனே வந்து உதவி செய்ததாக நீங்கள் சொன்னதும் ஞாபகத்தில் இருக்கிறது. உங்களுக்கு நான் என்ன துரோகம் செய்தேன் என்று தெரியவில்லை. உங்களால் ஏராளமான மிரட்டல்களையும் அவமானங்களையும் நான் சந்தித்துவிட்டேன். என் மீதான உங்கள் புகாரை சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
More Cinema News
bobby-simha-reshmi-menon-become-parents-again
பாபி சிம்ஹா - ரேஷ்மி நட்சத்திர தம்பதிக்கு குவா குவா... ஒரே படத்தில் நடித்தபோது காதலித்து மணந்தவர்கள்..
actor-dr-rajasekhar-meets-with-an-accident
நடிகர் டாக்டர் ராஜசேகர் விபத்தில் சிக்கி காயம்.. காரில் பலூன் விரிந்ததால் உயிர் தப்பினார்..
dhanush-actress-chaya-singh
துணை முதல்வரின் மனைவியான தனுஷ் பட நாயகி...மன்மத ராசாவுக்கு குத்தாட்ட ஆடிய நடிகை...
poojakumar-kamalhaasan-photo-trolled
கமலுடன் பூஜாவை இணைத்து  கிசுகிசு... கண்டுகொள்ளாத நடிகை படத்தை வெளியிட்டார்..
actor-aarv-trolled-director-saran
மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் ஹீரோவுக்கு எதிர்ப்பு... இயக்குனர் சரண் பதில்...
chinmayi-trolls-vijay-fans
விஜய் ரசிகர்களை வம்பிழுத்த மீடு பாடகி... பலத்துக்கெல்லாம் குறைச்சல் இல்ல...
actor-vishal-requests-fans-not-to-place-banners-prior-to-action
ஆக்‌ஷன் படம் ரிலீஸ்: பேனர் கலாச்சாரம் வேண்டாம்...விஷால் திடீர் வேண்டுகோள்...
khushbu-quits-twitter
டிவிட்டரை தெறிக்கவிடும்  குஷ்பு விலகியது ஏன் தெரியுமா...? சமூக வலைதளங்கள் கட்டாய தேவை இல்லையாம்...
vijays-thalapathy-65-with-magiz-thirumeni
தளபதி 64 ஷூட்டிங் நடக்கும்போதே தளபதி 65 பரபரப்பு.. விஜய்யை இயக்கும் அடுத்த இயக்குனர் பெயர் லீக்..
dharbar-vs-pattas-on-pongal
பொங்கலுக்கு ரஜினி-தனுஷ் மோதல்? ரசிகர்களிடையே பரபரப்பு...
Tag Clouds