சிங்கம்போல.. பாடல் பாடிய பரவை முனியம்மா மருத்துவமனையில் அனுமதி... மாற்றுதிறனாளி மகனுக்காக வேண்டுகோள்...

by Chandru, Oct 22, 2019, 16:43 PM IST

விக்ரம் நடித்த தூள் படத்தில் சிங்கம்போல நடந்துவரான் செல்ல பேராண்டி.. பாடலை தனது கணீர் குரலில் பாடி திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்தவர் பரவை முனியம்மா காதல் சடுகுடு, சண்டை, வீரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவர் மேலும் பல பாடல்கள் பாடியிருக்கிறார். இவர் மதுரை மாவட்டம் பரவை பகுதியை சேர்ந்தவர்.

நாட்டுபுற பாடல்கள் பாடுவதில் திறமையானவர். ஆனாலும் தொடர்ந்து பல படங்களில் வாய்ப்பு குறைந்ததால் வறுமையில் வாடினார். உடல் நலமும குன்றியது. இதையறிந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவருக்கு அரசு சார்பில் ரூ 6 லட்சம் வைப்பு நிதி அளித்தார். அதிலிருந்து மாதம் 6 ஆயிரம் வருமானம் முனியம்மாவுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

76 வயதாகும் பரவை முனியம்மா வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். அதில், நான் இறந்தபிறகு தனக்கு மாதம்தோறும் வழங்கும் 6 ஆயிரம் ரூபாயை தனது மாற்றுத்திறனாளி மகனுக்கு வழங்க வேண்டும் என கேட்டிருக்கிறாராம். அவரது கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் என்று பரவை பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Leave a reply