தளபதி 65 இயக்குனர் ஷங்கரா... சிவாவா?.... விஜய் படம் இயக்க விருப்பம்....

by Chandru, Oct 22, 2019, 16:50 PM IST
Share Tweet Whatsapp

தல அஜித் நடித்தவீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய 4 படங்களை இயக்கினார் சிறுத்தை சிவா. இப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. தற்போது ரஜினி நடிக்கும் தலைவர் 168 என்று தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தை இயக்குகிறார்.

இதற்கான ஹீரோயின் மற்றும் நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், விழா ஒன்றில் பங்கேற்க இயக்குனர் சிவா, விஜய்யுடன் கூடிய சீக்கிரமே படம் பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார். அட்லி இயக்கத்தில் நடித்துள்ள பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64 வது படம் நடிக்கிறார்.

இப்படம் முடிந்த பிறகு விஜய் - சிவா கூட்டணி தளபதி 65 அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக விஜய் 65 படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குவார் என்ற பேச்சும் உள்ளது.


Leave a reply