ஆஸ்கார் இல்லாவிட்டால் கோல்டன் குளோப் விருது.. சோலோ பார்ட்டியாக போராடும் பார்த்திபன்..

Otha cheruppu size 7 Going to Golden Globe Award

by Chandru, Oct 23, 2019, 16:43 PM IST

நடிகர் பார்த்திபன் ஒருவரே நடித்து இயக்கி திரைக்கு வந்த படம் ஒத்த செருப்பு. இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் உள்ளிட்ட பெரும்பாலான நடிகர்கள், இயக்குனர்கள் பார்த்திபனுக்கு பாராட்டு தெரிவித்திருந்தனர். திரையரங்கிலும் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

ஒத்த செருப்பு படத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும். பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் கலந்துரையாடுவார். அவர் மட்டுமே படம் முழுவதும் நடிப்பார்.

ஒத்த செருப்பு படம் ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்த்தனர். அதற்கான முயற்சிகளும் நடந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. தற்போது, ஆஸ்கார் விருதுக்கு அடுத்த பெரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கு ஒத்த செருப்பு படத்தை அனுப்பும் முயற்சியில் பார்த்திபன் ஈடுபட்டு உள்ளார். இதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார். வெற்றி செய்தியோடு பார்த்திபன் வருவார் என்று அவரது உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

You'r reading ஆஸ்கார் இல்லாவிட்டால் கோல்டன் குளோப் விருது.. சோலோ பார்ட்டியாக போராடும் பார்த்திபன்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை