சூப்பர் ஹீரோ வாகும் சிவகார்த்திகேயன் பட டீஸர் ரிலீஸ்.. ஹாலிவுட் பாணியில் ஒரு அட்வென்சர் படமாக உருவாகிறது,,

Sivakarthikeyans Hero teaser to be released tomorrow

by Chandru, Oct 23, 2019, 16:49 PM IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ஹீரோ படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. அடுத்து, இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஹீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் கல்யாணி பிரியதர்ஷன், இவானா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். அர்ஜூன், ரோபோ சங்கர், பிரேம் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா, கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இணைந்த இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி ஹீரோ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அக்டோபர் 24-ந் தேதி அதாவது நாளை காலை 11.03 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முகத்தில் முகமூடி அணிந்தபடி சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படம் சூப்பர்ஹீரோ கதை அம்சம் கொண்டதாக உருவாகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

You'r reading சூப்பர் ஹீரோ வாகும் சிவகார்த்திகேயன் பட டீஸர் ரிலீஸ்.. ஹாலிவுட் பாணியில் ஒரு அட்வென்சர் படமாக உருவாகிறது,, Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை