தைவானுக்கு கமலுடன் பறக்கும் காஜல்... தற்காப்பு வித்தையை காட்டுகிறார்...

Kajol Agarwal Going to thailand for Indian 2 Shooting

by Chandru, Oct 23, 2019, 16:58 PM IST

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2ம் பாகத்தில் இந்தியன் தாத்தா சேதுபதியாக நடிக்கிறார் கமல். முதல்பாகத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்த கமல் 2ம் பாகத்தில் சேதுபதி பாத்திரத்தில் மட்டும் நடிக்கிறார். இதில் தற்காப்பு கலை தெரிந்தவராக வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். இதற்காக அவர் முறைப்படி தற்காப்பு கலைகள் கற்க பயிற்சி மேற்கொண்டார். வழக்கமான அழகு தோற்றத்திலிருந்து காஜல் அகர்வால் இதில் மாறுபட்ட மேக்அப்பில் வருவார் என்று தெரிகிறது.

இது பற்றி காஜல் அகர்வால் கூறும்போது,' இந்தியன் 2வில் தற்காப்பு கலை தெரிந்தவராக நடிக்கிறேன். அதில் என்னுடைய வயது, தோற்றம் பற்றி இப்போது எதுவும் கூறமுடியாது அடுத்த மாதம் தைவானில் படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறேன்' என்றார்.
இதற்கிடையில் கமலஹாசன் 90வது முதியவராக போபாலில் நடிக்கும் காட்சிகள் படமாகி வருகின்றன.

இந்தியன் முதல் பாகத்தில் சேதுபதி இந்தியன் தாத்தாவாக நடித்த கமல்ஹாசன் அப்படத்தின் கிளைமாக்ஸில் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதுபோல் காட்சி அமைக்கப் பட்ட நிலையில் மீண்டும் லஞ்ச ஊழல் அதிகரித்ததையறிந்து வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து லஞ்சம் வாங்குபவர்களை பழிவாங்குவதுபோல் 2ம் பாக காட்சிகள் கமல் நடிக்க உள்ளார்.

இம்முறை அவர் போலீஸ் பிடியில் சிக்கி தான் செய்த கொலைகளுக்கு தண்டனை பெறுவதுபோலவும் காட்சிகள் அமைக்கப்பட உள்ளன. எனவே இந்தியன் படம் 2ம் பாகத்தோடு முடிவடைந்துவிடும். சூர்யாவின் சிங்கம் படம் போல் 3 அல்லது 4 பாகத்துக்கு நீடிக்காது என தெரிகிறது.

You'r reading தைவானுக்கு கமலுடன் பறக்கும் காஜல்... தற்காப்பு வித்தையை காட்டுகிறார்... Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அதிகம் படித்தவை