ஹரியுடன் மீண்டும் இணையும் சூர்யா ... சிங்கம் 4ம் பாகத்துக்கு கூட்டணி ரெடி...

by Chandru, Oct 23, 2019, 22:57 PM IST

சூர்யா நடித்த காப்பான் சமீபத்தில் திரைக்கு வந்து 100 கோடி வசூல் சாதனை படைத்து வெற்றிபெற்றது. இதையடுத்து இறுதிசுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இப்படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், ரஜினிகாந்த நடிக்கும் 168வது படத்த சிவா இயக்க உள்ளார். இதையடுத்துசிவா, சூர்யா கூட்டணி படம் தற்போதைக்கு கிடையாது என்பது உறுதியானது.

இந்நிலையில் அடுத்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். ஹரி, சூர்யா கூட்டணி இணைந்து ஏற்கனவே ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 பாகம் என 5 படங்கள் வழங்கி உள்ளது. அடுத்து சிங்கம் 4ம் பாகத்தில் இருவரும் இணைவார்கள் என்று தெரிகிறது. இது ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ஆறாவது படமாகும்.

தீபாவளிக்கு வெளியாகும் கைதி படத்தின் புரமோஷனில் நடிகர் கார்த்தி பங்கேற்று வருகிறார். ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்தியிடம், சூர்யாவின் அடுத்த படம் பற்றி ரசிகர்கள் கேட்டபோது, 'அடுத்து ஹரி இயக்கத்தில் நடிக்க சூர்யா தயாராகி வருகிறார்' என்றார். அநேகமாக இப்படம் சிங்கம் 4 படமாக இருக்கும் என்று தெரிகிறது. அல்லது புதிய கதைக்களமாகவும் இருக்கலாம்.


Leave a reply