வெளிநாட்டு பாய்பிரண்ட் ஆண்ட்ரு நிபோன் உடன் காதல் கொண்டு அவருடன் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்ந்தார் நடிகை இலியானா. இதனால் பட வாய்ப்புகள் பறிபோனது.
இப்படியே போனால் திரையுலகை விட்டு ஒதக்கிவிடு வார்கள் என்பதை புரிந்துகொண்ட இலியானா, ஆண்ட்ருவுடனான காதலை முறித்துக் கொண்டு அவரை விட்டு பிரிந்தார். புதிய பட வாய்ப்புகளுக்காக இலியானா காத்திருக்கிறார். அதே சமயம் காதல் பிரிவிலும் வாடிக்கொண்டிருக்கிறார்.
தனிமையில் இருக்கும் நேரங்களில் காதலன் நினைவு இலியானாவை வாட்டுகிறதாம். சமீபத்தில் வீட்டின் ஜன்னல் அருகே நின்றிருந்தவருக்கு எங்கேயோ ஒலித்த காதல் பாடல் காதில் விழ அதைக்கேட்டு மெய்மறந்து நின்றார்.
காதலன் நினைவில் நீச்சல் உடையில் ஜன்னல் அருகே காத்திருக்கும் தனது நிலையை புகைப்படமாக நெட்டில் வெளியிட்ட இலியானா. 'காதல் பாடல்களைக் கேட்டு, ஒரு மியூசிக் வீடியோவில் என்னை கற்பனை செய்து கொண்டிருக்கும்போது நான் ஜன்னலுக்கு வெளியே விவேகமாகப் பார்க்கிறேன்' என்று தனது தனிமை நிலையை உணர்த்தியிருக்கிறார். காதலன் திரும்பி வருவாரா? இலியானிவின் ஏக்கத்தை தீர்ப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.