கேத்ரினா கைப்புக்காக பாலிசியை மாற்றிய நயந்தாரா.. அழகு சாதன வீடியோ விளம்பரத்தில் நடித்தார்...

Nayanthara and Katrina Kaif come together for promotional video

Oct 23, 2019, 17:26 PM IST

நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டாலும் சமீபகாலமாக அவர் ஹீரோகள் இல்லாமல் சோலோவாக நடித்து வெளியான சில படங்கள் தோல்வி அடைந்தன.

ஆனாலும் தான் நடிக்கும் படங்களின் புரமோஷன்களில் பங்கேற்பதில்லை, அழகு சாதனை பொருட்களுக்கான விளம்பரத்தில் நடிப்பதில்லை என்று ஒருசில பாலிசிகளை கடைபிடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட் நடிகை கேத்ரினா கைப்புக்காக தனது பாலிசியை விட்டுக்கொடுத்திருக்கிறார் நயன்தாரா.

கேத்ரினா கைப் பெண்களுக்கான அழகு சாதன பொருட்களை விற்க முடிவு செய்திருக்கிறார். அதற்கு விளம்பர படங்களில் நடித்து கொடுக்க தன்னுடைய தோழி நடிகைகளிடம் அவர் கேட்டார். அந்த வகையில் நயன்தாராவிடமும் இதுகுறித்து கேத்ரினா கேட்டார். அதற்கு உடனே ஒப்புதல் அளித்த நயன்தாரா. அதற்கான ஷூட்டிங்கில் கலந்துகொண்டு நடித்துக்கொடுத்தார். இதையடுத்து நயன்தாராவுக்கு கேத்ரினா நன்றி தெரிவித்திருக்கிறார். அவர் கூறும்போது,'தனது பிஸியான நேரத்திலும் நயன்தாரா நேரம் ஒதுக்கி படப்பிடிப்பில் பங்கேற்றதற்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.

கேத்ரினாவின் நன்றி மெசேஜிக்கு நயன்தாரா பதில் அளிக்காவிட்டாலும் அவரது சார்பில் காதலன் விக்னேஷ்சிவன் பதில் அளித்திருக்கிறார். அதில், 'நயன்தாராவுக்காக ஸ்பெஷல் ட்ரீம்மென்ட் அளித்ததற்காக கேத்ரினாவுக்கு நன்றி' என குறிப்பிட்டுள்ளார்.

You'r reading கேத்ரினா கைப்புக்காக பாலிசியை மாற்றிய நயந்தாரா.. அழகு சாதன வீடியோ விளம்பரத்தில் நடித்தார்... Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை