ரசிகர்களுடன் அமர்ந்து பிகில் படம் பார்த்த நடிகை டிவிட்... வெறித்தனமான தீபாவளி....

Actress Varalaxmi Sarathkumar says about Thalapathy Vijays Bigil

by Chandru, Oct 26, 2019, 08:49 AM IST

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் ரூ.180 கோடி செலவில் உருவாகியுள்ள படம் பிகில். இன்று முதல் திரைக்கு வந்துள்ள நிலையில் ரசிகர்கள், திருவிழா கூட்டம்போல் தியேட்டர்களில் திரண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் பல தியேட்டர்களில் நேற்று அதிகாலை. 4.30 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப் பட்டன. ராயப்பன், மைக்கேலாக தந்தை மகன் என இரு வேடத்தில் விஜய் நடித்திருக்கிறார்.

விசில் படத்தின் அதிகாலை காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்த நடிகை வரலட்சுமி, இயக்குனர் அட்லீயை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. என்ன வசனம்.. என்ன நடிப்பு.. விஜய் கண்டிப்பாக வேற லெவல்.. இப்படத்தை தயாரித்ததற்காக அர்ச்சனா கல்பாத்திக்கு நன்றி.. வெறித்தனமான தீபாவளி' என பதிவிட்டுள்ளார்.

You'r reading ரசிகர்களுடன் அமர்ந்து பிகில் படம் பார்த்த நடிகை டிவிட்... வெறித்தனமான தீபாவளி.... Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை