கவர்ச்சியாக நடிப்பேன், ஆபாசமாக நடிக்க மாட்டேன்... கண்ணடித்து கவர்ந்த நடிகை சொல்கிறார்....

Priya Prakash Varrier Ready for Glamour

by Chandru, Oct 26, 2019, 21:04 PM IST

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் படத்தில் அறிமுகமானவர் பிரியா வாரியர். காதலனை பார்த்து கண்ணடித்து ஒரே இரவில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனவர்.

சீக்கிரமே முன்னணி இடத்தை பிடித்துவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் பட வாய்ப்புகள் குறைவாக வந்தன. இந்நிலையில் இணைய தள பக்கத்தில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.

நீச்சல் குளத்தில் குட்டை ஆடையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் பிரியா வாரியர். அதைப்பார்த்தவர்கள், பட வாய்ப்புக்காக ஆபாசமாக நடிக்க துணிந்துவிட்டீர்களா என்று கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்திருக்கிறார்.

'நடிகை என்றதும் அவரது சொந்த வாழ்க்கை, சினிமா வாழ்க்கை இரண்டையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கக்கூடாது. ஒரு நடிகைக்கு தனி ரசிகர் வட்டம் உருவாகி விட்டால் அவர்கள் ரசிக்கும்படியாக நடந்துகொள்ள வேண்டும்.

அதனால்தான் கொஞ்சம் கவர்ச்சியாக நீச்சல் உடையில் படங்களை எடுத்து வெளியிட்டேன். மற்றபடி கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நான் கவர்ச்சியாக நடிப்பேன் ஒருபோதும் ஆபாசமாக நடிக்க மாட்டேன்' என்றார் பிரியாவாரியர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை