கடந்த 2010-ம் ஆண்டு திரைக்கு வந்த முன்தினம் பார்த்தேனே என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் லட்சுமி பிரியா. நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மாயா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார், சினிமாவில் போதுமான வாய்ப்பு கிடைக்காததால் குறும் படங்கள் நடிப்பதில் ஆர்வம் கட்டினார்.
அதில் “லஷ்மி” என்ற குறுப்படம் பிரபல மானது. இது லஷ்மி என்ற ஒரு பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படம் ஆகும்.
இந்திலையில் லட்சுமி பிரியா, பெங்களூரை சேர்ந்த எழுத்தாளர் வெங்கட்ராகவன் என்பவரை திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.