பிகில் படத்தில் குண்டம்மா காட்சி நீக்கம்...நடிகையிடம் மன்னிப்பு கேட்ட விஜய்..

Vijay Bigil Gundamma Dialogue scene deleted

by Chandru, Nov 2, 2019, 23:32 PM IST
நடிகர் விஜய் நடித்து தீபாவளியையொட்டி திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் பிகில். அட்லி இயக்கியிருந்தார். நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார்.
இப்படத்தில் பெண்கள் கபடி அணியில் இந்துஜா , வருஷா பொல்லம்மா போன்றவர்கள் நடித்திருந்தனர். அவர்களுடன் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் ஒரு காட்சியில் பெண்கள் அணியினர் சரியாக விளையாடததால் அவர்களை விஜய் திட்டுவது போல் காட்சி இடம்பெற்றிருந்தது. பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்தவரை குண்டம்மா, குண்டம்மா என்று விஜய் திட்டுவார்.
இக்காட்சி ரசிக்கும்படியாக இருந்தாலும் சிலர் இதை தவறானது என விமர்சித்துள்ளனர். இதையடுத்து குண்டம்மா என்று திட்டும் காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இந்த காட்சியில் நடித்த பிறகு என்னிடம் வந்து விஜய் ஸாரி சொன்னாரம்.
இதுபற்றி அக்காட்சியில் நடித்த இந்திரஜா கூறுபோது, நான் இந்த வசன பேசமாட்டேன் என்று மறுத்தேன் ஆனால் காட்சிக்கு தேவைப்படுவதால் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் நடித்தேன் என தன்னிடம் விஜய் தெரிவித்தார்என்றார்.

You'r reading பிகில் படத்தில் குண்டம்மா காட்சி நீக்கம்...நடிகையிடம் மன்னிப்பு கேட்ட விஜய்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை