விஜய் பட நிர்வாக தயாரிப்பாளர் இணை தயாரிப்பாளர் ஆனார்... தளபதி 64 அப்டேட்...

by Chandru, Nov 5, 2019, 21:39 PM IST

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தளபதி 64. இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. இதில் விஜய் சேதுபதி, சாந்தனு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு காரணமாக படப்பிடிப்பில் அவ்வப்போது தடங்கள் ஏற்படுகிறது.

தளபதி 64 படத்தை விஜய்யின் உறவினர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். லலித் என்பவர் நிர்வாக தயாரிப்பாளராக இருந்து வந்தார். இந்நிலையில் லலித் இணை தயாரிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள் ளார், அதற்கான ஒப்புதல் பெறப் பட்டிருப்ப தாக தெரிகிறது.

ஏற்கனவே இப்படத்தின் தயாரிப்பிலிருந்து தயாரிப்பாளர் பிரிட்டோ விலகி கொண்டதாக தகவல் பரவியது. ஆனால் அது வெறும் வதந்திதான் என பட தரப்பினர் கூறினார். இந்நிலையில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் இணை தயாரிப்பாளராக மாறியிருப்பது ஏற்கனவே வந்த வதந்தி உண்மைதானோ என்று பேச்சு எழுந்துள்ளது.


Leave a reply