ஆன்மீக பாதைக்கு மாறும் சிம்பு...40 நாள் விரதமிருந்து ஐயப்ப தரிசனம் செய்கிறார்

by Chandru, Nov 5, 2019, 22:37 PM IST
கடந்த சில வருடங்களாகவே நடிகர் சிம்பு மீது பல்வேறு புகார்கள் வந்த வண்ணமிருக்கிறது. குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வருவதில்லை, ஒப்புக் கொண்ட படங்களில் நடிப்பதில்லை என கூறப்படுகிறது. சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு திடீரென்று அதில் நடிக்க மறுத்தார் சிம்பு.
இதுபற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தரப்பட்டது. மேலும் சிம்புவுக்கு பதிலாக வேறு ஹீரோவை வைத்து மாநாடு படத்தை தயாரிப்பேன் அப்படத்தின் தயாரிப்பாளர்   அறிவித்தார். இதற்கிடையில் சிம்புவின் சார்பில் அவரது தாயார் பிரச்னை குறித்து பேசி சமரசம் பேசி மாநாடு படத்தில் சிம்பு நடிப்பார் என்று தெரிவித்தார்.

தொடர்ச்சியாக பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் சிம்பு அதிலிருந்து விடுபட்டு சினிமா வில் சிக்கல் எதுவும் இல்லாமல் பயணிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் சபரிமலை ஐயப்பனுக்குவேண்டிக்கொண்டு துளசி மாலை அணிந்து  40 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு நடந்து செல்ல முடிவு செய்திருக்கிறார்.
 
27 வருடத்துக்கு முன் எங்க வீட்டு வேலன் படத்தில் நடித்தபோது பக்தியில் திளைத்த சிம்பு 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பக்தி மார்க்கத்துக்கு மாறியிருக்கிறார். சில வருடங் களுக்கு முன் ஆன்மிக பயணமாக இமய மலைக்கும் சிம்பு சென்று திரும்பினார் என்பது நினைவு கொள்ளத்தக்கது.

Leave a reply