சிவகார்த்திகேயனின், ஹீரோ பட சிங்கிள் டிராக் ரிலீஸ் அப்டேட்..யுவன் சங்கர் ராஜா இசையில் மால்டோ கிட்டபுலே...

Sivakarthikeyans movie Hero first single track release

by Chandru, Nov 6, 2019, 09:44 AM IST
'எங்கவீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ஹீரோ. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இவர்இரும்புத்திரைபடத்தை இயக்கியவர்.
இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படம் மூலம் கல்யாணி தமிழில் அறிமுகமாகிறார். மேலும் அர்ஜுன், ரோபோ ஷங்கர், அபய் தியோல், இவானா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். . ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஹீரோ படத்தின் டீசரை சில நாட்களுக்கு முன் இந்தி நடிகர் சல்மான் கான் வெளியிட் டார். அடுத்து இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் மால்டோ கிட்டபுலே பாடலின் வீடியோ வரும் நவ.7ம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட் டுள்ளது. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி டிசம்பர் 20ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை