தர்பார் ரஜினியின் ஸ்டைலான மோஷன் போஸ்டர்  கமல் வெளியிட்டார்... நெட்டில் சில நிமிடங்களில் வைரலாக  பரவியது...

by Chandru, Nov 8, 2019, 10:38 AM IST
Share Tweet Whatsapp

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். மும்பை போலீசாக ரஜினி நடிக்கும் இந்த படத்தினை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பை ரஜினி முடித்து கொடுத் திருக்கிறார். ஏற்கெனவே இப்படத்தில் ரஜினியின் அட்டகாசமான புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இன்று மாலை இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தமிழில் நடிகர் கமல்ஹாசன் தர்பார் மோஷன் போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தெலுங்கில் நடிகர்  மகேஷ் பாபு. மலையாளத்தில் மோகன்லால், இந்தியில் சல்மான்கான் வெளியிட்டனர்.  

ரஜினியின் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் நெட்டில் வைரலாக பரவியது.

சண்டைகாட்சி ஒன்றில் ரோலிங் சேரில் அமர்ந்து மோதும் ரஜினியின் ஸ்டையிலான புகைப்படாமாக அந்த ஸ்டில் இருந்தது.   படத்தில் இது முக்கியமான சண்டை காட்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  அத்துடன் தர்பார் தீம் மியூசிக்கும் வெளியானது.


Leave a reply