ஹீரோவை மட்டும் திருப்தி பண்ணா போதுமா? டைரக்டர் அட்லி மீது சுந்தர்.சி மறைமுக தாக்கு..

Advertisement
விஷால் நடித்திருக்கும் ஆக்‌ஷன் படத்தை இயக்கியிருக்கிறார் சுந்தர் சி. ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சுந்தர்.சி பேசியதாவது
ஆக்‌ஷன் என்னுடைய கனவு படம்.
இதுபோன்ற பெரிய படங்களுக்கு தயாரிப் பாளர் ரவிசந்திரன் மாதிரி அமைவது வரம். சண்டைக் காட்சிகளில் தமன்னா டூப் போடாமல் அவரே தைரியமாக பணியாற்றினார்.. பாகுபலி படத்தில் தமன்னாவின் சண்டைக் காட்சிகளைப் பார்த்தேன். அவர் தான் இந்த படத்திற்கு பொருத்தமாக இருப் பார் என்று நடிக்க வைத்தேன். அகனஷாவையும் ஒரு நிகழ்ச்சியில் பார்த்து தான் தேர்ந்தெடுத்தோம். தமன்னா, அக்கன்ஷா இருவரும் தினமும் படப்பிடிப்பு முடிந்து போகும்போது காயத்தோடு தான் போவார்கள். ஐஸ்வர்யா லக்ஷமி, சாயாசிங் ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
விஷால் இயக்குநரின் நடிகர். ஒருமுறை அவர் ஒப்பந்தம் செய்துவிட்டால் நாம் என்ன சொல் கிறோமோ அதை அர்ப்பணிப்போடு செய் வார். மேலிருந்து குதிக்க சொன்னேன். உடனே குதித்து விட்டார்.
இளம் இயக்குனர்கள் பெரிய ஹீரோக்களை வைத்துப் படம் எடுக்கும்போது அவர்களைத் திருப்திப்படுத்துவதில் மட்டுமே குறியாக உள்ளனர். ஹீரோக்களே இயக்குனர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதால் தயாரிப்பா ளர்களால் இயக்குனரை ஒன்றும் சொல்ல முடியவில்லை. தேவையே இல்லாமல் ஹீரோ பின்னாடி 2, 000 எக்ஸ்ட்ரா ஆர்டிஸ்டுகளை நிற்க வைத்து பிரம்மாண்டத்தை காட்டு கிறார்கள். நாள் முழுவதும் ஒரே ஒரு ஷாட்டை மட்டும் எடுத்து நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கிறார்கள். சில இயக்குநர்கள் பெரிய ஹீரோ படங்களை இயக்கும்போது ஹீரோக் களை திருப்திப்படுத்துவதில் காட்டும் அக்கறையை தயாரிப்பாளரின் தயாரிப்பு செலவில் காட்டுவதில்லை. ஹிப் ஹாப் ஆதி இசை அமைக்கிறார்.
இவ்வாறு சுந்தர்.சி கூறினார்.
விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங் களை இயக்கிய அட்லி பெரும் பொருட்செல வில் படங்களை இயக்குகிறார். போட்ட பட்ஜெட்டைவிட அதிகமாக செலவுகளை இழுத்து விடுகிறார். இதனால் தயாரிப்பாளர்க ளுக்கு போட்ட பணம் திரும்பி வருவதில்லை. பல கோடி வசூல் செய்தாலும் கடைசியில் நஷ்டம் என்ற தகவல்தான் பரவலாக பேசப் படுகிறது என அட்லி மீது இந்த புகாரை சில தயாரிப்பாளர்கள் அட்லி மீது வைத்துள்ளனர்.
தற்போது பிகில் படம் 200 கோடி வசூல் என்ற தகவல் வந்தாலும் தயாரிப்பாளர் தரப்பில் வசூல் நிலவரம் இன்னும் முழுதிருப்தி ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் முதல் நாளே விஜய் பெயரை தட்டிக் கொண்டு சென்றுவிட்டார். இதை குறிக்கும் வகையில்தான் ஆக்‌ஷன் நிகழ்ச்சியில் சுந்தர்.சி பேசியதாக கூறப்படுகிறது.
Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>