மால்டோ கிட்டபுலேஅப்படின்னா என்ன?.. சிவகார்த்திகேயனிடம் கலாய்ப்பு...

Sivakarthikeyan Movie HERO

by Chandru, Nov 11, 2019, 18:36 PM IST

இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கும் புதியபடம் ஹீரோ.

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. சில தினங்களுக்கு முன் இப்படத்தில் இடம்பெற்ற மால்டோ கிட்டபுலே என்று தொடங்கும் பாடல் வெளியானது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். ரோகேஷ் பாடல் எழுதியிருந்தார். இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த தங்கமாரி ஊதாரிஎன்ற பாடல் எழுதியவர்.

வட சென்னை பாஷையில் பல பாடல்கள் வருகிறது. அவற்றிற்கு ஓரளவுக்கு அர்த்தம் புரிந்துகொள்ள முடியும். அந்த பாணியில் வந்திருக்கும் மால்டோ கிட்டபுலே பாடல் கேட்டால் அர்த்தம் புரியாமல் மண்டை குழம்பிடுச்சி. அந்த வார்த்தைகளுக்கு என்னதான் அர்த்தம் என்று பட தரப்பினரை கேட்டு வந்தனர்.

ஒருவன் வீரமாகவும் கெத்தாகவும் இருப்பதற்குப் பெயர்தான் மால்டோ கிட்டபுலே என்று படக்குழுவினர் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். இந்த விளக்கத்தைகேட்டு அப்பாடா இப்பவாவது சொன்னீங்களே என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மண்டை குழப்பம் விடுதலையானார்கள்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை