கன்னித்தன்மை பற்றி கேள்வி? கோபத்தில் பொங்கிய நிவேதா தாமஸ்..

by Chandru, Nov 11, 2019, 18:44 PM IST
Share Tweet Whatsapp

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஹிட்டான திர்ஷ்யம். இந்த படம் தமிழில் பாபநாசம் பெயரில் உருவானது. இதில் கமல்ஹாசன் நடித்திருந்தார். அவரது மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். தற்போது ரஜினி நடிக்கும் தர்பார் படத்தில் நடிப்பதுடன், சிவகார்த்திகேயன் படமொன்றிலும் நடித்து வருகிறார்.

தனது இணைய தள பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் ஜாலியான கேள்விகளுக்கு நிவேதாவும் ஜாலியாக பதில் அளித்து வருகிறார். ஆனால் ஒருசிலர் அவரிடம் ஆபாசமாக கேள்வி கேட்டு கடுப்பேற்றுகிறார்கள். அவர்களுக்கு நிவேதா பதிலடி கொடுத்து வருகிறார்.

இதுபற்றி நிவேதா கூறும்போது,'ஒரு சிலர் ஜாலியாகவும், பொறுப்புடனும் கேட்கும் கேள்விகளுக்கு நானும் நேரம் எடுத்து பதில் சொல்கிறேன். ஆனால் சில கேள்விகள் என்னை கோபமூட்டுவதாக உள்ளது. அதுபோன்ற கேள்விளை நான் தவிர்க்கிறேன்.

உங்கள் திருமணம் எப்போது, ஒரு வார்த்தையில்  செக்ஸ் பற்றி பதில் சொல்லுங்கள், பாய்பிரண்ட இருக்கிறாரா, என்னை திருமணம் செய்துகொள் வீர்களா, நீங்கள் கன்னித்தன்மை உள்ளவரா என அருவெருப்பாக கேட்கிறார்கள்.

இன்னொரு பெண்ணிடம் நீங்கள் பேசுகிறீர்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். தயவு செய்து மரியாதையாகவும், கண்ணியத்துடனும் கேள்விகேளுங்கள். இதுபோன்ற நபர்களை நான் வெறுக்கிறேன்' என்றார்.


Leave a reply