சூர்யா படத்துக்கு நடிகர் அமைக்கும் தீம் மியூசிக்...மாரா விரைவில் எழுவான்..

by Chandru, Nov 12, 2019, 15:54 PM IST
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியானது காப்பான். அதன் பிறகு சூர்யா நடிக்கும் படம் சூரரைப் போற்று. சூர்யா மாரா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இப்படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இவர் மாதவ்ன், ரித்திகா சிங் நடித்த இறுதிசுற்று படத்தை இயகியவர்.
ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபி நாத்தின் வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து இதன் கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சூரரைப்போற்று படத்தின் பர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது. இதுபற்றி இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், மாரா ... மாரா எனும் ஸ்பெஷல் தீம் மியூசிக் கம்போஸாகி வருகிறது. விரைவில் மாரா எழுவான்என தெரிவித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கவனம் செலுத்து வதால் இசை அமைப்பதை குறைத்துக் கொண்டிருக்கிறார். தன்னை நம்பி தேடி வரும் படங்களை மட்டும் ஏற்று இசை அமைக்க ஒப்புக்கொள்கிறாராம். ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகும் தலைவி படத்துக்கும் ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

Leave a reply