ரூ.100 கோடி நெருங்கும் கார்த்தியின் கைதி... பிகில் தியேட்டர்களில் கைதி மாற்றம்..

Karthis Kaithi marching towards Rs 100 crore mark

by Chandru, Nov 12, 2019, 16:02 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தினா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் நடித்த படம் கைதி. கடந்த மாதம், தீபாவளியையொட்டி வெளியான இப்படத்துக்கு ரசிகரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

விஜய்யின் 'பிகில்' படத்துக்கு போட்டியாக கைதி வெளியானதால், முதல் வாரத்தில் 250 திரையரங்குகளில்தான் வெளியானது. ஆனால், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்ததுடன் ரசிகர்களிடையே வரவேற்பும் அதிகரித்தது. இதையடுத்து திரையரங்குகள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி பட தயாரிப்பாளர் எஸ்,ஆர்,ஸ்ரீதர் கூறும்போது, கடந்த 3 வாரங்களில் இப்படம் 350 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சென்னையில் 'பிகில்' திரையிட்டு வந்த சில முக்கியத் திரையரங்குகளில் 'கைதி' படம் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கைதி படம் தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி நல்லவசூலை அள்ளி உள்ளது.

உலகமெங்கும் இதுவரை 80 கோடி வசூல் தொட்டிருக்கும் கைதி 100 கோடி வசூலை நெருங்கிக்கொண்டிருக்கிறது. விரைவில் கார்த்தியின் கைதி 100 கோடி வசூல் கிளப்பில் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

More Cinema News