நேரமில்லாததால் நடிகை திருமணம் கேன்சல்.. கோபத்தில் மாப்பிள்ளை மலேசியா பறந்தார்...

by Chandru, Nov 19, 2019, 16:36 PM IST
சித்தார்த், ஹன்சிகா நடித்த 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் ஹன்சிகாவினுடைய தோழியாக நடித்தவர் பிரியங்கா. புதிய படங்களில் நடிக்க காத்திருந்தவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் டிவி மெகா சீலியலில் நடிக்க வாய்ப்பு வந்தது, ஏற்றுக்கொண்டார்.
ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவருக்கு பெண்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே தெலுங்கு சீரியல் நடிகர் ராகுலும், பிரியங்காவும் காதலித்து வந்தனர். கடந்த வருடம் மே மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
ஒரு வருடம் முடிந்தும் திருமணம் நடந்த பாடில்லை. பிரியங்கா டிவி சீரியலில் ஓய்வின்றி நடித்து வருவதால் திருமணத்தை தள்ளிப்போட்டு வந்திருக்கிறார். காத்திருந்த மாப்பிள்ளை ராகுல் கோபம் அடைந்து மலேசியா புறப்பட்டு சென்றார். தனது திருமணம் குறித்து தெரிவித்திருக்கும் பிரியங்கா, ராகுல் உடனான திருமணம் நின்றுவிட்டதாக கூறி உள்ளார்.


More Cinema News