தளபதி 64 சாந்தனு தந்த அப்டேட்.. அமைதியாக இருங்கள்... இயக்குனரை நம்புங்கள்...

by Chandru, Nov 19, 2019, 16:45 PM IST
Share Tweet Whatsapp

லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார். சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துக்கொண்டு டெல்லி சென்ற படக்குழு அங்கு 2ம் கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறது. விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, சாந்தனு நடிக்கும் காட்சிகள் படமாகி வருகின்றன. இவர்களுடன் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

முதன்முறையாக விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார் சாந்தனு. இவர் விஜய்யின் தீவிர ரசிகரும் ஆவார்.

படப்பிடிப்பு இடைவேளையில் லோகேஷ் கனகராஜுடன் செல்பி எடுத்துக்கொண்ட சாந்தனு அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, 'அமைதியாக இருங்கள், லோகேஷை நம்புங்கள்' என  ரசிகர்களுக்கு மெசேஜ் வெளியிட்டிருக்கிறார். அமைதியாக இருங்கள் ஆக்ரோஷமாக படம் தயாராகிறது என்பதை பூடகமாக சாந்தனு தெரிவித்திருப் பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Leave a reply