நடிகர் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம்.. முதலமைச்சர் வழங்கினார்...

by Chandru, Nov 19, 2019, 21:10 PM IST
Share Tweet Whatsapp

நடிகரும் மக்கள் நீதி கட்சி தலவருமான கமல்ஹாசனுக்கு அவரது திரையுலக சாதனையை பாராட்டும் வகையில் ஒடிசாவில் உள்ள சென்சுரியன் தனியார் பலகலைக்கழகம் அவருக்கு கவுரவ  டாக்டர் பட்டம் அறிவித்தது.

அதை பெறுவதற்காக கமல் நேற்று ஒடிசா புறப்பட்டு சென்றார். அம்மாநில முதல்வர் நவின் பட்னாயக்கை சந்தித்தார். இருவரும் அரசியல் நிலவரம் குறித்து பேசினார்கள் அவரிடம் மநீமய்யம் கட்சி பற்றியும் கூறி ஆலோசனை பெற்றார். கமலுக்கு, முதல்வர் நினைவு பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினார்.

பின்னர் இன்று மதியம்  பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில் கமல் கலந்துகொண்டார். அவருக்கு முதல்வர் பட்நாயக் டாக்டர் பட்டம் வழங்கினார். ஏற்கெனவே கமலுக்கு சென்னை யில் உள்ள ஒரு  பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a reply