1 மாதம் கழித்து தீபாவளி கொண்டாடிய ரஜினி பட இயக்குனர்...லேட்டானாலும் சூப்பர்...

by Chandru, Nov 19, 2019, 16:27 PM IST

ரஜினி நடித்த பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் அடுத்து தனுஷ் டி40 படத்தை இயக்குகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்த முடிந் துள்ளது.

இதற்கிடையில் தீபாவளிக்கு திரைக்கு வந்த கார்த்தியின் கைதி படத்தை சமீபத்தில்தான் தியேட்டரில் சென்றுபார்த்தார் கார்த்திக் சுப்பராஜ். அதுகுறித்து இணைய தள பக்கத்தில் தெரிவித்திருப்பதுடன் லோகேஷ் கனகராஜ், கார்த்தி குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

'படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது, ஆச்சரிய பட வைக்கும் காட்சிகள் நிறைய இருந்தன. நான் தீபாவளிக்கு வெளியான படத்தை தாமதமாக பார்த்திருக்கிறேன். ஆனாலும் தியேட்டரில் தீபாவளி கொண்டாடியது போல் இருந்தது' என்றார் .

லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ் நடிக்கின்றனர். இப்படம் பற்றி கூறிய லோகேஷ்கனராஜ்,' விஜய் இதுவரை நடித்த படங்களிலிருந்து தளபதி 64 கட்டாயம் மாறுபட்டிருக்கும்' என்றார்.

Get your business listed on our directory >>More Cinema News

அதிகம் படித்தவை