விரதம் இருக்கப்போகும் நயன்தாரா...என்ன விஷயம் தெரியுமா..?

by Chandru, Nov 19, 2019, 16:14 PM IST
நயன்தாரா விரதம் இருக்கப்போகிறார் என்றதும் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காகவே என்று பலரும் எண்ணுவார்கள். ஆனால் அவர் புதிதாக நடிக்க உள்ள படமொன்றுக்காக விரதம் இருக்க முடிவு செய்திருக்கிறார்.
காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி எல்கேஜி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்து மூக்குத்தி அம்மன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகவிருக்கிறார். அவருடன் இணைந்து என்.ஜே.சரவணன் இயக்குகிறார். பக்தி படமாக உருவாகும் இப்படத்தில் அம்மன் வேடம் ஏற்கிறார் நயன்தாரா.
அம்மன் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆர்.ஜே.பாலாஜி நயன்தாராவிடம் கேட்ட போது,'அம்மன் படமென்றால் அதற்கு சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். படப்பிடிப்பு தொடங்கி முடியும் வரை விரதம் இருக்க வேண்டும். ஏற்கனவே ஸ்ரீராமராஜ்யம் என்ற படத்தில் சீதை வேடம் ஏற்றபோது விரதம் இருந்துதான் நடித்தேன். மூக்குத்தி அம்மன் படத்துக்கும் விரதம் இருந்து நடிப்பேன்' என்றாராம். இதை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்தார்.
''ஸ்ரீராமராஜ்யம்'' படம் கடந்த 2011ம் ஆண்டு திரைக்கு வந்தது. அப்படத்துக்கு விரதமிருந்த நடித்த நயன்தாரா மீண்டும் 8 வருடத்துக்கு பிறகு மூக்குத்தி அம்மன் படத்துக்காக விரதம் இருந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்.


More Cinema News