சினிமா விநியோகஸ்தர் சங்கதேர்தலில் போட்டி.. டைரக்டர் டி.ராஜேந்தர் முடிவு..

by Chandru, Nov 21, 2019, 17:53 PM IST
Share Tweet Whatsapp

சென்னை தி.நகரில் உள்ள  இல்லத்தில்  டைரக்டர் டி.ராஜேந்தர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் தான் போட்டியிட உள்ளேன். விநியோகஸ்தர்கள் தேர்தலில் மாற்றம் வர வேண்டும். அப்போது தான் தமிழகம் முழுவதும் சினிமா விநியோகம் சிறப்பாக இருக்கும்.

விநியோகஸ்தர் சங்க தேர்தலில் நிற்கவேண்டும் என்று என்னை எனது  நண்பர்கள் வற்புறுத்தி கேட்டுக்கொண்டனர், எனவே  வரும் டிசம்பர் 21-ம் தேதி நடக்க உள்ள திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் போட்டியிடுகிறேன்,  சினிமாவை காப்பாற்ற யாரை வேண்டுமானாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.

ரஜினியும், கமலும் சினிமாவில் எனக்கு மூத்தவர்கள். இருவருக்கும் நான் ரசிகன்.
அரசியலில் இருவரும் இணைந்து செயல்பட உள்ளது பற்றி கேட்கிறார்கள்.  நான் ஒன்றும் சொல்வதற்கில்லை, அரசியலில் வெற்றி பெற அனுபவமும் வேண்டும், அதிர்ஷ்டமும் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a reply