கடந்த 2013ம் ஆண்டு இது என்ன மாயம் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சண்ட கோழி 2ம் பாகம் என பல படங்களில் நடித்து விட்டார்.
அவர் திரையுலகிற்கு வந்து 6 வருடம் ஆகியிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து மெசேஜ் வெளியிட்டுள்ளார்.
'திரையுலகில் ஹீரோயினாக நடிக்க வந்து 6 வருடம் ஆகிறது. பலவித கதாபாத்திரங்களில் வாழ்ந்துவிட்டேன். அதை எனது பாக்யமாக கருதுகிறேன். என்னை ரசிகர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.
அடுத்தடுத்து வரும் காலங்களில் இன்னும் நிறைய கதாபாத் திரங்களில் நடிக்க ஆவலாக, தயாராக இருக்கிறேன். எனவே ரசிகர்கள் அனை வரும் பாப்கார்னோடு இருக்கையில் காத்திருங்கள் நாம் இன்னும் நீண்ட தூர பயணம் போக வேண்டியிருக்கிறது' என தெரிவித்திருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்து 6 வருடங்கள் மட்டுமே ஆகியிருந்தாலும் அதற்குள் நடிகையர் திலகம் (தெலுங்கில் மகாநடி) படத்தில் சிறந்த நடிப்புக்கான தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.