மைதா மாவு என்று ஆடுகளம் படத்தின் மூலம் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர். அந்த பட்டத்தை கொண்டு கோவுட் ஆடுகளத் தை ஆட்டுவிக்க தெரியாமல் புதிதாக வாய்ப்பு வராதா என்று கோடம்பாக்க வீதிகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர் டாப்ஸி.
ஆனால் லண்டனிலிருந்து வந்து ரஜினியின் 2.0 படம் வரை ரீச் ஆகிவிட்டார் எமி ஜாக்ஸன், போட்டி களத்தை சக ஹீரோயின் களிடம் இழந்த டாப்ஸி இந்தியில் நடிக்கச் சென்றார். அது ஓரளவுக்கு கை கொடுத்தது. அதை அப்படியே கெட்டியாக பிடித்துக்கொண்டு பாலிவுட்டில் காலத்தை தள்ளிக்கொண்டிருக்கிறார்.
ஆனாலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவரது காலை வாரிவிடுவதற்கு அங்கு நிறையபேர் இருக்கிறார்களாம். இந்தி திரையுலகிற்கு செல்ல தமிழ் திரை உலகை ஒரு ஏணியாக பயன்படுத்திக் கொண்டார் டாப்ஸி என்று அவர் மீது புகார் கூறுகின்றனர். அதை மறுத்திருக்கிறார் . இதுபற்றி அவர் கூறும்போது. தென்னிந்திய படங்கள் மீது எப்போதும் மரியாதை உண்டு. இந்தி திரையுலகிற்கு செல்ல அதை ஏணியாக பயன்படுத்திக்கொண்டேன் என்பது தவறு.
இந்தி படங்களில் நடிக்க ஆசைப்பட்டதால் இந்தியில் வாய்ப்பு வந்ததும் ஏற்றுக்கொண் டேன். ஆனால் திரையுலகின் அடிப்படை விஷயங்களான கேமரா, நடிப்பு போன்ற எல்லாவற்றையும் தென்னிந் திய படங்களில் தான் கற்றுக்கொண்டேன். தற்போது தமிழ் மொழி பேச கற்றிருக்கிறேன். தென்னிந்திய திரையுலகில் நடிக்க மறுத்தால் அது நான் செய்யும் முட்டாள்தனம் ஆகிவிடும் என்றார் டாப்ஸி.