தளபதி 64 சேட்டிலைட் உரிமை கைப்பற்றிய நிறுவனம்.. 3ம் கட்ட படப்படிப்பிலேயே சூடு பிடித்த பிஸ்னஸ்..

by Chandru, Nov 30, 2019, 23:02 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 64'. சென்னை, டெல்லியில் 2 கட்ட படப் பிடிப்பு முடிந்து 3ம் கட்டமாக கர்நாகடாவில் உள்ள சிமோகாவில்நடக்கிறது. அங்குள்ள சிறையில் விஜய், விஜய்சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக உள்ளன.
இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. படப்பிடிப்பு தொடங்கி நடந்து வரும் நிலையிலேயே விஜய் 64 பட சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டிருப்பது சினிமா வட்டாரத்தில் இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸின் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
தளபதி 64 படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய்யுடன் அவர் நடித்த முக்கிய காட்சிகள் டெல்லியில் படமானது.
தீபாவளிக்கு திரைக்கு வந்த கைதி படத்தை லோகேஷ் கனகராஜ் தளபதி 64 படத்தை இயக்குவதுடன் விஜய்யின் பிகில் பட வசூலை சில இடங்களில் கைதி படம் மிஞ்சியதும் தளபதி 64 படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
அந்த எபெக்ட்தான் 3ம் கட்ட படப்பிடிப்பி லேயே படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸ் நடந்து முடித்திருக்கிறது என்கிறது பட வட்டாரம்.


Speed News

 • சென்னை ராயபுரத்தில்

  3717 பேருக்கு கொரோனா

  தமிழகத்தில் சென்னையில்தான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில் அதிக அளவாக 3,717 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து, தண்டையார்பேட்டை 2,646, தேனாம்பேட்டை 2,374, கோடம்பாக்கம் 2,323, திரு.வி.க. நகர் 2,073, அண்ணாநகர் 1,864, அடையாறு 1,153, வளசரவாக்கம் 1,043 பேருக்கும்  கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.


   
  Jun 7, 2020, 13:30 PM IST
 • ஜெ.அன்பழகன் உடல்நிலையில்

  ஓரளவு முன்னேற்றம்..

  திமுக மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகனுக்கு கடந்த 2ம் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் ரேலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், அந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. 

  இந்நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. ஆரம்பத்தில் 80 சதவீதம் வென்டிலேட்டர் உதவியால் மூச்சு விட்ட அன்பழகன், நேற்று 67 சதவீத வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்தார். இந்நிலையில், அவருக்கு சுவாசிப்பதற்கு வெறும் 29 சதவீத அளவே வென்டிலேட்டர் உதவி தேவைப்படுவதாகவும், அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. 

  Jun 7, 2020, 13:24 PM IST
 • மகாராஷ்டிராவில் 
  82,968 பேருக்கு கொரோனா..
   
  மகாராஷ்டிராவில் இது வரை 82,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில், 37,390 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு பலியானவர் எண்ணிக்கை 2,969 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிராவே முதல் இடத்தில் உள்ளது.
   
   
  Jun 7, 2020, 13:21 PM IST
 • டெல்லியில் நாளை

  ஓட்டல், கோயில்கள் திறப்பு

  டெல்லியில் நாளை முதல் ஓட்டல்கள், கோயில்கள், வணிக வளாகங்கள் திறக்கப்படும் எ்னறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த மாதமே தளர்த்தப்பட்டாலும், வெளி மாநிலங்களில் இருந்து இ-பாஸ் பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தன. நாளை முதல் இந்த கட்டுப்பாடும் நீக்கப்படுகிறது. 

  டெல்லியில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. இது வரை 27,654 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. எனினும், நாளை முதல் டெல்லி இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறது. 

  Jun 7, 2020, 13:17 PM IST
 • டெல்லி குடிகாரர்களுக்கு

  ஒரு நல்ல செய்தி..

  டெல்லியில் கடந்த மாதம் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போது, மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. அப்போது மதுபானங்கள் மீது அதிகபட்ச சில்லரை விற்பனை விலையில்(எம்.ஆர்.பி), 70 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. கொரோனா தடுப்பு பணிக்கு நிதி சேர்ப்பதற்காக இந்த ‘கொரோனா வரி’ விதிக்கப்பட்டது.

  இந்நிலையில்,  வரும் 10ம் தேதி முதல் இந்த கொரோனா வரி வாபஸ் பெறப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

  Jun 7, 2020, 13:10 PM IST