இயக்குனர் ராஜமவுலி நடிகை கதறல்.. பொது இடத்தில் அழுததால் பரபரப்பு.

by Chandru, Dec 4, 2019, 18:33 PM IST
Share Tweet Whatsapp

பாகுபலி படத்தையடுத்து ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் என்ற  படம் மூலம் தென்னிந்திய திரையுலகிற்கு அறிமுகமாகிறார் பாலிவுட் நடிகை அலியாபட்  இவரும், சகோதரி ஷஹீன் பட் பொது  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர்.  

ஜாலியாக பேசிக்கொண்டிருந்த  அலியாபட் தனது அக்கா ஷஹீனை பற்றி பேசத் தொடங்கியதும் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு அருகில் இருந்த ஷஹீன் ஆறுதல் கூறியும் அழுகையை நிறுத்தாமல் கண்ணீரை துடைத்தபடி தேம்பி தேம்பி அழுதார் .

பின்னர் அலியாபட் கூறும்போது,'என் வீட்டில் கடைக்குட்டி நான்தான். எனது அக்கா ஷஹீன் பயந்து சுபாவம் கொண்டவர். தன் மீதே தனக்கு நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து வந்தார். அவரைப் பார்த்தால் என் இதயமே நொறுங்கிவிடும். அவருடன் கடந்த 26 வருடமாக  நான் வாழ்ந்து வந்தாலும் அவரைப்பற்றி நான் சரியாக புரிந்துகொள்ளமாலிருந்தேன். அவரை பலவித கஷ்டங்களுக்கு உள்ளாக்கியிருக்கிறேன். அப்போதெல்லாம் அவரை கஷ்டப்படுத்துகிறோம் என்பதே எனக்கு தெரியாமலிருந்தது.  

சமீபத்தில் ஷஹீன் எழுதிய 'எப்போதும் நான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை' என்ற புத்தகத்தை படித்தபிறகுதான் அவரைப்பற்றி முழுமையாக தெரிந்துகொண்டேன். அவருக்கு வருடக்கணக்கில் கொடுத்த தொல்லையை எல்லாம் அதன்பிறகு ன் உணர்ந்தேன். அந்த குற்றவுணர்விலிருந்து என்னால் மீள முடியவில்லை. அதனால்தான் நான் அழுதேன். 

எங்கள் குடும்பத்தில் ஷஹீன்தான் மிகவும் புத்திசாலி.  எப்போது நான் உணர்ச்சி வசப்பட்டுவிடுவேன். ஷஹீன் புரிந்துகொள்ளாம லிருந்துவிட்டோமே என்ற குற்ற  உணர்வை எனனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இவ்வாறு அலியாபட் கூறினார்.


Leave a reply