ஜேம்ஸ் பாண்ட் 007  பட டிரெய்லர் இன்று வெளியீடு.. பாண்டாக டேனியல் நடிக்கும் கடைசி படம்..

by Chandru, Dec 4, 2019, 18:42 PM IST
Share Tweet Whatsapp
கேசினோ ராயல், குவான்டம் ஆஃப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் என நான்கு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்த டேனியல் கிரெய்க் மீண்டும் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
 
அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகர் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில் சமாதானம் அடைந்த டேனியல், தான் நடிக்கும் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் இதுதான் என்று கூறி நோ டைம் டு டெய் படத்தில் நடிக்க சம்மதித்தார். அப்படம் பெரும்பகுதி முடிந்துவிட்டது. கேரி ஜோஜி இயக்குகிறார்.
 
வழக்கம்போல் இப்படத்திலும் ஜேம்ஸ் பாண்டின் சாகசங்கள் அசத்தலாக படமாகியிருக்கிறது. டேனியல் கிரேக் உடன் ரால்ஃப் பியன்னஸ், நவோமி ஹாரிஸ் உள்ளிட்ட பல ஹாலிவுட் ஸ்டார்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டீஸர் நேற்று வெளியாகி, உலகம் முழுவதும் உள்ள ஜேம்ஸ் பாண்ட் பட ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு பெற்றது.
 
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது. பரபரப்புகளுக்கு இடையே உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது.

Leave a reply