ஜெய், அதுல்யா நடித்தது உள்ளிட்ட  10 படம் ஒரே நாளில்  ரிலீஸ்.. தியேட்டர்களுக்கு கடும் போட்டி..

by Chandru, Dec 4, 2019, 18:57 PM IST
Share Tweet Whatsapp
தமிழ் திரையுலகில் இப்போதெல்லாம் படம் எடுப்பது எளிதாகிவிட்டது அந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வது கடினமாகிவிட்டதாக தயாரிப்பாளர்கள் மேடைக்கு மேடை பேசுகின்றனர். பொங்கல், தீபாவளி, தமிழ்புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் ரஜினி, விஜய், அஜீத் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் வெளியாகி தியேட்டர்களை ஆக்ரமிக்கின்றன. மற்ற படங்களுக்கு தியேட்டர் கிடைக்காமல் ஒரு வாரம், இரண்டு வாரம் தள்ளி ரிலீஸ் செய்ய வேண்டிய நிலைமை உள்ளது.
சாதாரண நாட்களில் சிறுபட்ஜெட் படங்கள் வரும்போது அது பெரிதாக கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனாலும் தியேட்டர் கிடைத்தால் போதும் என்று எண்ணி படங்களை ரிலீஸ் செய்ய முன் வருகின்றனர். இந்த ஆண்டின் கடைசி மாத மான டிசம்பரில் மீண்டும் தியேட்டர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது.
 
பொங்கல் தினத்தில் ரஜினியின் தர்பார் படம் வரவிருப்பதால் அப்போது மோத விரும்பாத வர்கள் அதற்கு முன்பே தங்கள் படத்தை வெளியிட போட்டியில் குதித்திருக்கின்றனர். வரும் 13ம் தேதி வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 10 படங்களின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் ஜெய் நடித்திருக்கும் கேப்மாரி படமும் உள்ளது.
 
மேலும்  கருத்துக்களை பதிவு செய், சென்னை டூ பாங்காங், காளிதாஸ், சாம்பியன், பரமு, திருப்பதி சாமி குடும்பம், ஜுமாங்கி தி நெக்ஸ்ட் லெவல் (டப்பிங்),  மாமாங்கம்(டப்பிங் ),  விஜயன் (டப்பிங்). இந்த போட்டியில் ஜெயிக்க போகும் படங்கள் எது என்பது படம் வெளியான ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.

Leave a reply